மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; 2 பேர் படுகாயம்
கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவிடைமருதூர்:
திருவாரூர் அரசவனங்காடு பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் ராமகிருஷ்ணன் (வயது34), அதே பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் குமார் (30). இவர்கள் இருவரும் கிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரில் வந்த கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.