மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து கைவரிசை: ரியல் எஸ்டேட் தரகரிடம் ரூ.3 லட்சம் திருட்டு
மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரியல் எஸ்டேட் தரகரிடம் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.;
சென்னை அடுத்த புழல் காவாங்கரை மகாவீர் கார்டன் 2-வது தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது 55). இவர் பிரபல குளிர்பான டீலராகவும், ரியல் எஸ்டேட் தரகராகவும் இருந்து வருகிறார்.
இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்று அங்கு நகைகளை அடகு வைத்து விட்டு, ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு அதனை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு புழலுக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் புழல் அருகே ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்ற அவர், பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைக்கப்பட்டு, ரூ.3 லட்சம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந் தார். இது குறித்து புழல் போலீசில் அவர் புகார் செய்த நிலையில், புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.