போதை பொருட்களுக்கு எதிராக போலீசாரின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்

போதை பொருட்களுக்கு எதிராக போலீசாரின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-08-16 13:47 GMT

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிற வகையில் திருச்சி எம்.ஜி.ஆர்.சிலை கோர்ட்டு ரவுண்டானா அருகே இருந்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மேயர் அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலம் அய்யப்பன்கோவில் வழியாக செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி, மத்திய பஸ் நிலையம், காமராஜர்சிலை, ராக்கின்ஸ்சாலை, ரெயில்வே சந்திப்பு ரவுண்டானா, தலைமை தபால்நிலைய ரவுண்டானா, டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டரங்கம் சென்றடைந்தது. காவலர்களின் பேண்டு வாத்திய இசையுடன் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் அன்பு, சுரேஷ்குமார், உதவி கமிஷனர்கள் அஜய்தங்கம், செந்தில்குமார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்