தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.;
தூத்துக்குடி கேம்ப்-1 பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக சங்கரநயினார் (வயது 53). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மதியம் மோட்டார் சைக்கிளில் தெற்கு பீச் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தூத்துக்குடி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஆறுமுகசங்கரநயினார் மீது மோதியது. தொடர்ந்து அவருக்கு பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆறுமுகசங்கர நயினார், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முத்தையாபுரத்தை சேர்ந்த குணா (32), இந்திரா, சந்தீப் (2½) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஆறுமுகசங்கர நயினார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.