மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர் கைது
பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் ராமதாஸ்(வயது33). இவர் நேற்று முன்தினம் காலை ஆலடிக்குமுளை குளக்கரையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மீண்டும் வந்து பார்த்தார். அப்போது ஒரு வாலிபர் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் ராமதாஸ் ஒப்படைத்தார். பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவா் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த ராமன் மகன் விக்கி என்கிற கலியபெருமாள் (24) என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.