மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது

மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு 5 மோட்டார் சைக்கிள்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-12-25 19:00 GMT

மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு 5 மோட்டார் சைக்கிள்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப்போவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில், நகரின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தினர்.

கைது-பறிமுதல்

விசாரணையில் மோட்டார் சைக்கிள்களை திருடியவர் தரங்கம்பாடி தாலுகா மேலப்பாதி தெற்குத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் இளையராஜா என்கிற மனோகர் (வயது40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்களை மீட்ட தனிப்படை போலீசார் பிடிபட்ட மனோகர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடியதாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் மனோகரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்