மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது

Update: 2023-02-05 19:30 GMT

சூரமங்கலம்:-

சேலத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக அந்த பெண்ணின் தாயாரின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

மாற்றுத்திறனாளி பெண்

சேலம் பழைய சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி ஒருவருக்கு, 40 வயதில் மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். இந்த நிலையில் மூதாட்டிக்கும், சிவதாபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதனால் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற சுப்பிரமணி, மூதாட்டியின் மகளுடன் பழகி வந்துள்ளார். அப்போது அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கைது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நிலையில் மாற்றம் காணப்பட்டது, இதையடுத்து மூதாட்டி தனது மகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்து பார்த்தார்.

பரிசோதனையில் அந்த மாற்றுத்திறனாளி பெண் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. பின்னர் விசாரிக்கும்போது தாயின் கள்ளக்காதலனான சுப்பிரமணி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.

இது குறித்து மூதாட்டி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்