கேம் விளையாடியதால் தாய் ஆத்திரம் - தூக்குபோட்டு பள்ளி மாணவி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டத்தில், பள்ளி மாணவி உட்பட இருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-10-10 10:17 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில், பள்ளி மாணவி உட்பட இருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியை சேர்ந்த பள்ளி சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி, எப்போதும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த சிறுமியின் தாய், மகளை திட்டியதாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த சிறுமி, வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல், நாகர்கோவில் கீழப் பெருவிளை பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர், பேட்டரி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வீட்டிற்கு செல்லாததால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் இன்று காலை கடைக்கு சென்று பார்த்தபோது, கடையினுள் விஜயன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்