மணவாளக்குறிச்சி அருகே தம்பதியை தாக்கிய தாய், மகள் கைது; சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

மணவாளக்குறிச்சி அருகே தம்பதியை தாக்கிய தாய், மகள் கைது செய்யப்பட்டனர். தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2023-04-01 18:45 GMT

மணவாளக்குறிச்சி, 

மணவாளக்குறிச்சி அருகே தம்பதியை தாக்கிய தாய், மகள் கைது செய்யப்பட்டனர். தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.

தாய்-மகள் கைது

மணவாளக்குறிச்சி அருகே மூங்கில்விளை காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). கொத்தனாரான இவருடைய மனைவி மஞ்சு (30). இவர்களுக்கு, வீட்டு முன்பு உள்ள தெருக் குழாயில் குடிநீர் பிடிப்பதில் அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (40), இவரது மனைவி மகேஸ்வரி (33) ஆகியோருடன் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன், மகேஸ்வரி, இரணியலைச் சேர்ந்த மதி, மகேஸ்வரியின் தாய் தமிழ்செல்வி ஆகியோர் ரமேஷ் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் திட்டியதுடன் கம்பியால் ரமேஷை தாக்கினர். இதனை தடுத்த அவரது மனைவி மஞ்சுவும் தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த ரமேஷ், மஞ்சு ஆகியோர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட மகேஸ்வரி (33) மற்றும் அவரது தாய் தமிழ்செல்வி (55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே வீடு புகுந்து தம்பதியை தாக்கும் வீடிேயா காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்