2 மகள்களுடன் தாய் தற்கொலை

அன்னவாசல் அருகே குளத்தில் குதித்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-03 18:48 GMT

மலையடிகுளம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் மலைக்கு பின்புறம் மலையடிகுளம் உள்ளது. இந்த குளத்தின் வழியாக சென்றவர்கள் குளத்தில் ஒரு சடலம் மிதப்பதை பார்த்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். குளத்தில் நீரில் மிதந்தவாறு ஒரு சடலம் தெரிந்தது.

3 பேரின் உடல்கள் மீட்பு

இதையடுத்து அந்த சடலத்தை போலீசார் குளத்தில் இறங்கி மீட்டபோது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது 2 சிறுமிகள் என 3 பேர் உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. பின்னர் 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு வெளிேய கொண்டு வந்தனர்.

3 பேரின் இடுப்பிலும் துப்பட்டாவால் ஒன்றாக கட்டியிருந்தது தெரிய வந்தது. 3 பேரும் இடிப்பில் துப்பட்டால் கட்டி குளத்தில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. இதனிடையே இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய்-மகள்கள்

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குளத்தில் பிணமாக கிடந்தவர்கள், ஆலங்குடி வட்டம் மாஞ்சான்விடுதியை சேர்ந்த குமார் மனைவி மாரிக்கண்ணு (வயது 40), அவர்களது மகள்கள் கோபிகா (17), தரணிகா (12) என தெரியவந்தது.

இறந்த கோபிகா, தரணிகா ஆகியேர் மாஞ்சான்விடுதி அரசுப்பள்ளிகளில் பிளஸ்-2 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். மற்றொரு மகளான தீபிகா (15) அரிமளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்ததால் அவர் தப்பினார்.

காரணம் என்ன?

மேலும் விசாரணையில் மாரிக்கண்ணுவுக்கும், அதே ஊரை சேர்ந்த வேறு ஒருவருக்கும் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் தாய் 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்