விருத்தாசலம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை

விருத்தாசலம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-19 17:15 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 30). இவரது மனைவி பிரியா(25). இவர்களது மகள் மோனிகா(7), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். ரஞ்சித் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரியா, தனது மகள் மோனிகாவிற்கு விஷத்தை கொடுத்துள்ளார். பின்னர் அந்த விஷத்தை அவரும் எடுத்து குடித்துள்ளார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

பின்னர் அவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை மோனிகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்