துறையூர் அருகே மகள் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை

துறையூர் அருகே மகள் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-27 19:37 GMT

துறையூர் அருகே மகள் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாம்பு கடித்து மகள் சாவு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழ குன்னூபட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி காயத்ரி (வயது 30). இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு இவரது மகள் பிரித்தி பாம்பு கடித்ததில் இறந்தார். மகளின் இறப்பை தாக்க முடியாமல் காயத்ரி துக்கத்தில் இருந்து வந்தார். மேலும் மகளின் இறப்பை உறவினர்களிடம் கூறி அழுதபடி இருந்துள்ளார்.

விஷம் குடித்தார்

இதற்கிடையே கடந்த 20-ந்தேதி துக்கம் தாங்கமுடியாமல் காயத்ரி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்