மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி தாய்- மகன் பலி

ஆற்காட்டில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தாய்- மகன் பலியானார்கள். தந்தை- மகன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2023-07-28 17:56 GMT

பஸ் மோதியது

வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 33). இவர் காட்பாடியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாயின் (25). இவர்களின் மகன்கள் சுபான் (5), இப்ராஹிம் (3). இவர்கள் 4 பேரும் நேற்று மாலை ஆற்காட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக வேலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

ஆற்காடு புதிய மேம்பாலம் அருகே சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த தனியார் பஸ் தஸ்தகீர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

தாய்- மகன் பலி

இதில் ஷாயின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தஸ்தகீர், சுபான், இப்ராஹிம் ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு டாக்டர்கல் பரிசோதனை செய்ததில் சுபான் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. தஸ்தகீர், இப்ராஹிம் ஆகிய இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்