பிரசவத்தில் தாயும், மகளும் சாவு

உப்பிலியபுரம் அருகே பிரசவத்தில் தாயும், மகளும் இறந்தனர்.

Update: 2022-10-05 19:50 GMT

உப்பிலியபுரத்தை அடுத்த ஒக்கரை குரும்பர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி கல்யாணி (27). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் 3-வதாக கர்ப்பமான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கல்யாணி பெருமாள்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை அசைவில்லாமல் இருந்ததால் துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, கல்யாணியும், குழந்தையும் இறந்தனர். இது குறித்த புகாரின் பேரில் .உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்