மின்னாம்பள்ளி ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

மின்னாம்பள்ளி ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

Update: 2022-09-26 18:45 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மின்னாம்பள்ளி கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு பணி நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் பொதுமக்களுக்கு காய்ச்சல் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார். மேலும் வீட்டுக்கு முன்பும் பின்புறமும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும், உடைந்த பானை, டயர், தேங்காய் ஓடு, இளநீர் ஓடு ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

தொடர்ந்து டெங்கு கொசு ஒழிப்பு கள பணியாளர்கள் மூலம் மின்னாம்பள்ளி ஊராட்சி பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதில் மின்னாம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணாம்பாள் பூபதி, துணைத்தலைவர் லதா கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்