மொபட்மோதி விவசாயி பலி

திருக்கோவிலூர் அருகே மொபட்மோதி விவசாயி பலி

Update: 2023-02-22 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் முருகன்(வயது 40). விவசாயியான இவர் சம்பவத்தன்று திருக்கோவிலூர்- ஆசனூர் சாலையில் அரும்பாக்கம் கிராமம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வேகமாக வந்த மொபட் முருகன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்