பெருந்துறை பகுதியில் சந்திரகிரகணத்தின்போது செங்குத்தாக நின்ற உலக்கை
பெருந்துறை பகுதியில் சந்திரகிரகணத்தின்போது செங்குத்தாக நின்ற உலக்கை
பெருந்துறை
சந்திரகிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியவற்றில் எந்த ஒரு கிரகண நிகழ்வு நடந்தாலும், கிரகண நேரத்தில் நெல் குத்த பயன்படும் 5 அடி உயரமுள்ள உலக்கையை தரையில் நிற்க வைத்தால் அது எவ்வித பிடிப்பும் இல்லாது செங்குத்தாக நிற்கும் என்பது நமது முன்னோர்கள் கூறிச் சென்ற சாஸ்திர வழக்காகும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 8.44 மணி முதல் இரவு 12.45 மணி வரை சந்திரகிரகண நிகழ்வு நடந்தது. அப்போது பெருந்துறையை அடுத்துள்ள பவானி ரோடு வாவிக்கடை பகுதியில் டீக்கடை நடத்தி வரும் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தனது வீட்டு வாசலில் 5 அடி உயர உலக்கை ஒன்றை எவ்வித பிடிப்பும் இல்லாது செங்குத்தாக நிற்க வைத்தார்.
இதற்கு முன்பு கடந்த மாதம் நடைபெற்ற சூரிய கிரகணத்தின் போதும், இவரது வீட்டு வாசலில் உலக்கை செங்குத்தாக நின்றது என்பது குறிப்பிடத்தக்கது.