காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்த மாதாந்திர ஆய்வு
காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்த மாதாந்திர ஆய்வு நடைபெற்றதை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பார்வையிட்டார்.
காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்த மாதாந்திர ஆய்வு நடைபெற்றதை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பார்வையிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 7 மகளிர் போலீஸ் நிலையங்கள், 1 குற்றவியல் போலீஸ் நிலையம், 3 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், 4 கலால் போலீஸ் நிலையங்கள் என 55 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
இந்த நிலையில் போலீஸ் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களின் பராமரிப்பு குறித்த மாதாந்திர ஆய்வு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு பராமரிப்புகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசாருடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் போலீசார், பணியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அவர் எடுத்துரைத்தார். மேலும் போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அவர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் என போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.