ஜூலை 18 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது...!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Update: 2022-06-30 15:25 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதேவேளையில், அக்னிபத், மராட்டிய அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் எனத்தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்