பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பிகளை உரசி செல்லும் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணி நடந்தது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சீயாத்தமங்கை ஊராட்சி மெயின்ரோடு பகுதியில் உயர் அழுத்தம் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளை உரசி கொண்டும், எந்நேரத்திலும் முறிந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தும் ஆபத்தான நிலையிலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்த மரங்களையும் வெட்டி அகற்றும் பணிகளில் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி அன்பழகன் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.