டி.கல்லுப்பட்டி அருகே லாரி-கார் மோதல்; 7 பேர் படுகாயம்
டி.கல்லுப்பட்டி அருகே லாரி-கார் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி அருகே லாரி-கார் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார்-லாரி மோதல்
தென்காசி மாவட்டம் அழகன்குளத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் எட்வர்ட் (வயது 38). இவர் தென்காசியில் இருந்து திருமங்கலத்துக்கு குப்பைலோடு ஏற்றுவதற்காக, லாரி ஓட்டிக்கொண்டு வந்தார். ராஜபாளையம்-மதுரை சாலையில், டி.கல்லுப்பட்டி அடுத்துள்ள எம்.சுப்புலாபுரம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் ஒன்றும், லாரியும் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் லாரியில் வந்த முத்துவேல்ராஜ், ஆறுமுகநயினார், ஆகியோருக்கும், காரில் வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த செல்வபெருமாள், குரு, கார் டிரைவர் சதீஷ்குமார், சரவணன், செங்கல்பட்டை சேர்ந்த இளஞ்செழியன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.