குடியிருப்பு பகுதியில் குரங்குகள் தொல்லை
குடியிருப்பு பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது.;
விருதுநகர் லட்சுமி காலனியில் 2 குரங்குகள் வீடுகளில் புகுந்து வீட்டில் இருக்கும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் நிலை உள்ளது. இதனால் விடுமுறை காலத்திலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் வெளியில் விளையாட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வனத்துறையினர் உடனடியாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.