'ஸ்மார்ட் காவலர்' செயலி மூலம் கண்காணிக்கும் பணி
‘ஸ்மார்ட் காவலர்’ செயலி மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கியது.
தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் உத்தரவின்படி விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் மேற்கு, கிழக்கு பஜார், சிவகாசி கிழக்கு, சிவகாசி நகர், அருப்புக்கோட்டை நகர், ராஜபாளையம் தெற்கு, வடக்கு, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், சாத்தூர் நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 'ஸ்மார்ட் காவலர்' செயலி மூலம் களப்பணியாற்றும் போலீசாரை கண்காணிப்பதற்காகவும், களப்பணியில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து உடனடியாக பதிவு செய்வதற்கும், களப்பணியில் உள்ள போலீசாருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தகவல் தெரிவிக்கவும் 'ஸ்மார்ட் காவலர்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டினை போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தொடங்கி வைத்து களப்பணியாற்றும் போலீசாருக்கு இது குறித்த விவரங்களை விளக்கினார்.