அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-08 18:59 GMT

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளருமான அருண் ராய், கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அரியலூர் தாசில்தார் அலுவலகத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அரியலூர் விளாங்கார தெரு குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அரியலூர் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டிட கட்டுமான பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் ஒன்றியம், வாலாஜாநகரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட கட்டுமான பணியையும், வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2 வகுப்பறை கட்டிட கட்டுமான பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினையும், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சி, வாரணவாசியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார் குட்டை ஏரி தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் பணிகளையும், அரியலூர் அரசினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்