கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2022-12-22 20:29 GMT

நெல்லை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

கண்காணிப்பு அலுவலர்

நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளருமான செல்வராஜ் நேற்று நெல்லைக்கு வந்தார்.

அவர் மானூர் யூனியன் அழகியபாண்டியபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.50 ஆயிரம் செலவில் சீரமைக்கப்பட்ட 100 குடியிருப்புகளையும், ரூ.21.44 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட ரேஷன் கடை, அங்கன்வாடி, நூலகம், சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திட்டப்பணிகள்

மேலும் நாராணம்மாள்புரம் பேரூராட்சி அனந்தகிருஷ்ணபுரத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்டு உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், நெல்லை மாநகராட்சி வி.எம்.சத்திரத்தில் சுற்றுச்சூழல் அமைப்பின் சமூக பொறுப்பு நிதியில் தூர்வாரப்பட்ட மூர்த்தி நயினார் குளத்தையும், ரெட்டியார்பட்டி ஊராட்சி கீழ புதுக்குளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12½ லட்சததில் தூர்வாரப்பட்ட சிறுபாசன குளத்தையும் தாமரை செல்வியில் ரூ.5.19 லட்சத்தில் தூர்வாரப்பட்ட குளம், ரெட்டியார்பட்டி யூனியன் தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மைய மேம்பாட்டு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இட்டேரியில் 16 ஏக்கரில் தரிசுநிலத்தை விவசாய நிலமாக மேம்படுத்தும் திட்ட பணிகளையும் பார்வையிட்டார்.

ஆய்வுக்கூட்டம்

இதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் சபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்