கண்காணிப்பு குழு கூட்டம்

பணியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2022-09-09 09:53 GMT

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சுகாதாரமற்று பணிபுரியும் பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், திருவள்ளூர் சப்- கலெக்டர் மகாபாரதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், வருவாய் ஆர்.டி.ஓ.க்கள், நகராட்சி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்