கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

கருங்கல் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-08-07 18:45 GMT

கருங்கல்:

கருங்கல் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கருங்கல் அருகே உள்ள மிடாலக்காட்டில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு பூஜையில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 2 உண்டியல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு பூசாரி வழக்கம்போல் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் பூசாரி வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 2 உண்டியல்களின் பூட்டும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மாயமாகி இருந்தன. நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து விட்டு வளாகத்தில் இருந்த நேர்ச்சை பொருட்களையும் கொள்ளயைடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கருங்கல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்