பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தை சேர்ந்த ஆவுடைக்குட்டி மனைவி பொட்டம்மாள்(வயது57). இவர் பேராவூரணிக்கு வந்து விட்டு பின்னவாசல் செல்ல தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது சித்தாத்திக்காடு கிராமம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் சென்றதை அறிந்த பொட்டம்மாள் பஸ்சை நிறுத்துங்கள் என்றார். ஆனால் பஸ்சை நிறுத்துவதற்குள் பொட்டம்மாள் இறங்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக பஸ் படியிலிருந்து கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பொட்டம்மாள் உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.