உமாமகேஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

உமாமகேஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Update: 2023-01-27 20:27 GMT

கும்பகோணம் அருகே உள்ள சாரங்கபாணி புளியம்பேட்டை கிராமத்தில் உமா மகேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலுக்கு பூஜை செய்ய வந்த சிவாச்சாரியார் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில நிர்வாகி பாலா திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்