வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.1¼ லட்சம் திருட்டு

கொண்டலாம்பட்டியில் வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.1¼ லட்சம் திருடி சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-02 19:53 GMT

கொண்டலாம்பட்டி

அமானி கொண்டாம்பட்டி கிழக்கு வட்டத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 33). இவர் செவ்வாய்பேட்டையில் வெள்ளி பட்டறை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவர், தனது மனைவி தமிழ்ச்செல்வியை (31) அழைத்துக்கொண்டு செவ்வாய்பேட்டையில் உள்ள பட்டறைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திய மர்ம நபர் அந்த வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை திருடி சென்று விட்டார்.

இந்த நிலையில் திருட்டு குறித்து தகவல் அறிந்து வீட்டுக்கு வந்து பார்த்த முத்துகிருஷ்ணன் திருட்டு குறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்