டாஸ்மாக் ஊழியர் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
தர்மபுரியில் டாஸ்மாக் ஊழியர் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போனது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் பிரபு (வயது 45). டாஸ்மாக் ஊழியர். இவர் தர்மபுரியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் எடுத்துள்ளார். பின்னர் பணத்தை தனது ஸ்கூட்டரில் வைத்து விட்டு பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் அவர் சாப்பிட சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஸ்கூட்டரின் சீட் சேதம் அடைந்து இருந்தது. மேலும் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பணத்தை திருடி சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.