வீரன் கோவிலில் பணம் திருட்டு
சேத்தியாத்தோப்பு அருகே வீரன் கோவிலில் பணம் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு
சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரி நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததுடன் அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் கோவில் கலசத்தையும் திருடிய மர்மநபர்கள் அதை அங்கையே வைத்து விட்டு சென்றுள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.