லாரி அதிபர் அலுவலகத்தில் பணம் திருட்டு

லாரி அதிபர் அலுவலகத்தில் பணம் திருட்டு போனது.

Update: 2023-01-24 22:34 GMT

அன்னதானப்பட்டி:

சேலம் சீலநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 45), லாரி அதிபர். இவர் சீலநாயக்கன்பட்டி காஞ்சி நகர், ஆத்தூர் பைபாஸ் சாலையில் ஒரு காம்ப்ளக்சில் லாரி அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 21-ந் தேதி வேலை முடிந்து அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல திறக்க வந்த போது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்