மணி எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்தில் முற்றுகை

மணி எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்தை முறையிட்டனர்

Update: 2023-06-23 20:05 GMT

ஓமலூர்:-

ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி அமரகுந்தி மாரியம்மன் கோவில் திடலில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனை மணி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர்கள் தொல்காப்பியன், ஞானசேகர் மற்றும் போலீசார், கோவில் இடத்தில் கூட்டம் நடத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, அறநிலையத்துறையில் அனுமதி வாங்கி கூட்டம் நடத்துமாறும், அனுமதி வாங்காமல் கூட்டம் நடத்தக்கூடாது என்றும் போலீசார் கூறினர்.

இதை தொடர்ந்து மணி எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, இதுவரை அனைத்து கட்சியினரும் அங்குதான் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இப்போது மட்டும் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள் என்று மணி எம்.எல்.ஏ. கூறினார். இதற்கிடையே கோவில் நிலத்தில் அரசியல் கட்சி கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அறநிலையத்துறை தரப்பில் போலீஸ் நிலையத்தில் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து மணி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. வினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்