பெண்களிடம் ரூ.6 லட்சம் மோசடி

பெண்களிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2022-12-21 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபா (வயது 35). வாலாந்தரவை பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (30). இவர்கள் நேற்று ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அதில் தங்களிடம் ஆன்லைன் மூலம் தொழில் செய்யலாம் அதில் அதிக லாபம் கிடைக்கும் என கூறி அதற்கு முதலீடாக ரூ.3 லட்சம் கட்ட வேண்டும் எனவும், மாதம்தோறும் ரூ.15,000 கிடைக்கும் எனவும், வீட்டில் இருந்தபடியே தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மட்டும் போனில் பேசியபடியே ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்யலாம் எனவும் கூறினர். வீட்டிற்கே நேரடியாக வந்து தேர்போகியை சேர்ந்த 2 பெண்கள் எங்களிடம் பலமுறை சந்தித்து பேசினர். இதை நம்பிய நாங்கள் இரண்டு பேரும் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் 6 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளோம். இந்த பணத்தை திரும்ப தருமாறு பலமுறை கேட்டும் பணத்தை தராமல் எங்களை ஏமாற்றி வருகிறார் என கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, குற்றப்பிரிவு போலீசாருக்கு இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்