நல்லம்பள்ளி:
சரவணம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ். வியாபாரியான இவர் களி மண்ணால் ஆன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் தனது கடையை விரிவுபடுத்த பெங்களூருவை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி கடன் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர்மபுரியை சேர்ந்த தனது நண்பரை போன் மூலம் அறிமுகம் செய்து வைத்து உள்ளார். அவரிடம் கடன் பெற தேவையான ஆவணங்கள் மற்றும் ரூ.4 லட்சத்தை கனகராஜ் கொடுத்துள்ளார். ஆனால் அதன்பின் கடன் வாங்கி தர அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மோசடியால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் இது குறித்து அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.