அரூர்:
அரூரை அடுத்த கொளகம்பட்டி வனப்பகுதியில் உள்ள காட்டு மாரியம்மன் கோவில் அருகே 2,000, 200, 100, 10 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. அதனை அந்த வழியாக சென்றவர்கள் போட்டிபோட்டு எடுத்தனர். அப்போது அந்த ரூபாய் நோட்டுகள் போலியானது என்பதும், குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும் கலர் தாள்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலி ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அங்கேயே போட்டு விட்டு சென்றனர்.