புழுதியூர் சந்தையில் ரூ.36 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

Update: 2022-10-07 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு புழுதியூரில் ஒவ்வொரு வாரமும் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு மாடு, ஆடு, கோழி, சேவல் போன்றவை விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இவற்றை வாங்க தர்மபுரி மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த சந்தையில் ஆடு ஒன்று ரூ.4,700 முதல் ரூ.8,400 வரை விற்பனையானது. மாடு ஒன்று ரூ.8,300 முதல் ரூ.44,900 வரை விலைபோனது. மொத்தம் ரூ.36 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்