குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர்
குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தது.;
குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் மிகவும் மோசமாக இருந்தது. சாரல் மழை இல்லாமல் அருவிகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டது. நேற்று முன்தினம் மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் இரவு திடீரென மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் சற்று அதிகமாக விழுந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
நேற்று தண்ணீர் வரத்து குறைந்து மிதமாக விழுந்தது. இதை அறிந்த உள்ளூர் மக்கள் நேற்று காைலயில் மெயின் அருவி, ஐந்தருவியில் திரண்டனர். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.