தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Update: 2023-05-24 09:40 GMT

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் 26-ந்தேதி வரை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வரும் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரி கடல், கேரள கடலோரம், லட்சத்தீவு பகுதிகளிலும், 27, 28 ஆகிய தேதிகளில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட நாட்களில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்