மருத்துவர்களை குறி வைத்து மொபைல் திருட்டு -திருடியவர் கூறிய அதிர்ச்சி தகவல்

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மட்டுமே குறி வைத்து, 200க்கும் அதிகமான செல்போன்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-12-02 11:27 GMT

சென்னை,

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், சில தினங்களுக்கு முன் மருத்துவர்கள் மற்றும் செவிலியரின் செல்போன்கள் திருடுபோய் உள்ளது. இதுகுறித்து சிசிடிவி காட்சி உதவியோடு விசாரணை நடத்திய போலீசார், வியாசர்பாடியை சேர்ந்த முனியாண்டி என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர், சென்னை மற்றும் ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மட்டுமே குறிவைத்து, 5 ஆண்டுகளாக செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் முனியாண்டி, தான் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றபோது, மருத்துவர்கள் தனது விரல்களை துண்டித்து காப்பாற்றியதாகவும், அதனால் மருத்துவர்கள் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில், அவர்களது செல்போன்களை திருடியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்