நடமாடும் மண் பரிசோதனை முகாம்

தலைஞாயிறில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2022-07-12 18:13 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு வட்டார வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் காடந்தேத்தி கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடந்தது.. வேளாண்மை அலுவலர் நவீன்குமார் முன்னிலை வகித்தார். முகாமிற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை தாங்கி பேசினார். முகாமில் மண்ணை பரிசோதனைக்கு எடுக்கும் முறைகள் பற்றி, அதன் அவசியம் குறித்தும் வேளாண் அலுவலர் சுதா செயல்விளக்கம் செய்து காண்பித்தார். விவசாயிகள் தங்கள் வயல்களில் சேகரித்த மண் மாதிரிகளை நடமாடும்மண் பரிசோதனை முகாமிற்கு கொண்டு வந்து வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். உடனடியாக வாகனத்திலேயே மண் பரிசோதனை செய்து முடிவுகள் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அமிர்தராஜ், ரவிச்சந்திரன், விதை அலுவலர்கள் ரவி, ஜீவா ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்