கிணத்துக்கடவு அருகே நடந்து சென்ற இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது

கிணத்துக்கடவு அருகே நடந்து சென்ற இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது

Update: 2022-11-21 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் சென்ட்ரல் பேங்க் வீதியைச் சேர்ந்த காளிமுத்து. இவரது மகள் நர்மதா (வயது 20). இவர் கோவை பைவ் கார்னரில் உள்ள தனியார் கம்பெனியில் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வருகிறார். நர்மதா நேற்று முன்தினம் கோவைக்கு வேலைக்கு சென்று விட்டு டவுன் பஸ்ஸில் கண்ணமநாயக்கனூர் வந்து இறங்கினார். அங்கிருந்து சொக்கனூரில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது கண்ணமநாயக்கனூர் ஆத்துப்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் நர்மதா தலையை தட்டிவிட்டனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து, நர்மதாவை பயமுறுத்திவிட்டு செல்போனுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச்சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் வழக்கு பதிவு செய்து செல்போன் பறித்ததாக வடக்கிபாளையம், ஆதியூர், மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த ராம்குமார் (20), அதே பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்