செல்போன் பறிப்பு
தஞ்சையில் நடைப்பயிற்சி சென்றவரிடம் செல்போனை பறித்து சென்றர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்;
தஞ்சை எலிசா நகரை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 61). சம்பவத்தன்று காலை நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் சிதம்பரத்திடம் பேச்சு கொடுத்தனர். அப்போது திடீரென சிதம்பரத்தின் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார்வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.