நடமாடும் தடய அறிவியல் வாகன சேவை

விழுப்புரத்தில் நடமாடும் தடய அறிவியல் வாகன சேவையை போலீஸ் டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்

Update: 2022-07-04 14:28 GMT

விழுப்புரம், 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 1-ந் தேதியன்று தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனங்களில் இருந்து தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி விழுப்புரம் மாவட்ட தடயஅறிவியல் துறைக்கு ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த வாகனம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தது.

இந்த நடமாடும் தடயஅறிவியல் ஆய்வக வாகனமானது விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் சம்பந்தமாக சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை விரைவாக ஆராய்ந்து வழக்குகளின் விசாரணையை உறுதிப்படுத்த பெரிதும் பயனுள்ளதாக அமையும். இந்த வாகனத்தை நேற்று காலை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முன்னிலையில் தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் சண்முகத்திடம் அந்த வாகனம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்