முன்னேற்பாடு பணிகளை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகளை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Update: 2023-07-03 18:45 GMT

திருக்கோவிலூர்

நலத்திட்ட உதவிகள்

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிற 19-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வருகிறார். மேலும் அவர் அன்றைய தினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

மேடை அமைக்கும் பணி

இதையொட்டி திருக்கோவிலூர் அடுத்த மாடம்பூண்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழா மேடை அமைக்கும் பணிகள் மற்றும் கொடிக்கம்பம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்