அடிப்படை வசதிகள் கேட்ட பொதுமக்களுடன்,அருள் எம்.எல்.ஏ. நேரில் சந்திப்பு
சேலம் குரங்குச்சாவடி அடிப்படை வசதிகள் கேட்ட பொதுமக்களை அருள் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து அதிகாரிகளை அழைத்து சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
சேலம் குரங்குச்சாவடி பெருமாள் மலை அடிவாரம் பனங்காட்டு வளவு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அந்த பகுதி மக்களுக்கு சாலை, சாக்கடை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சிரமமாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத வகையில் சாலை மண்சாலையாக உள்ளது என்று அருள் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.
இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. பனங்காட்டு வளவு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் உடனடியாக ரோடு அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.. மேலும் அந்த பகுதி மக்களிடம் அருள் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டார்.
அப்போது பசுமை தாயகம் மாநில இணை பொதுசெயலாளர் சி.பி.சத்ரியசேகர், கோட்ட செயலாளர் சரவணன், அன்புமணி தம்பிகள் படை செயலாளர் இளவரசன், பசுமை தாயம் செயலாளர் கார்த்திக், நிர்மல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.