சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை வரும் பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

Update: 2023-04-08 06:54 GMT

கோப்புப் படம்

சென்னை,

ரூ.2,467 கோடி புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வு விலக்கு, நிலக்கரி விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை மசோதா,ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் மனு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்