நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சி ஏழரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா (வயது 25). இவரது கணவர் கீர்த்தி வாசன். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி அன்று கீர்த்தி வாசன் தனது பெற்றோரை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி நாட்டறம்பளளி போலீஸ் நிலையத்தில்புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கீர்த்தி வாசன் நேற்று காலை போலிசார் தேடுவது தெரிந்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் விசாரணை நடத்தி மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.