பஞ்சப்பள்ளி அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

Update: 2023-02-25 18:45 GMT

பாலக்கோடு:

பஞ்சப்பள்ளி அருகே உள்ள காடுசின்னேகவுண்டனஅள்ளியை சேர்ந்தவர் பொன்னப்பன். இவர் ராயக்கோட்டையில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இளவரசி (வயது 24) என்ற மனைவியும், நர்மதா ஸ்ரீ (6), மோனிஷா (1) ஆகிய பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 23-ந் தேதி பொன்னப்பன் வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை பார்த்து அதிச்சி அடைந்தார். அவர்களை பல்வேறு இடங்களில் தேடினார். மேலும் உறவினர்களிடம் விசாரித்தார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 குழந்தைகளுடன் மாயமான இளவரசியை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்